Tuesday, May 6, 2014

கர்த்தர் அவனை நேசித்தார்

Scripture வேதவசனம்:   2 சாமுவேல் 12:24  பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்.
25. அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.

Observation கவனித்தல்: ஆச்சரியமான சிந்தனை. விபச்சாரம், கொலை ஆகியவற்றில் துவங்கிய ஒரு உறவில் இருந்து சாலமோன் என்ற குழந்தை பிறக்கிறது. “ அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்” என்று வேதம் கூறுகிறது. 
இன்று குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அனேக குழந்தைகள் உள்ளனர்.  அவர்கள் தங்கள் பெற்றோர்களின் பாவங்களினால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் கேலி பண்ணப்படுகிறவர்களாகவும் இருக்கின்றனர்.  ஆனால் கர்த்தர் அவர்களை நேசிக்கிறார். கர்த்தருக்கு பிரியமில்லாதவைகளை நாம் செய்யக் கூடுமானால், கண்டிப்பாக அவருக்கு பிரியமானவைகளையும் செய்ய முடியும். அவர் நேசிப்பவர்களை நேசிப்பது என்பது மகிழ்ச்சியானதாகவே இருக்கிறது.
 
Application பயன்பாடு: பெரியோர்களால் உண்டாக்கப்பட்ட பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் அனேக குழந்தைகள் வாழ்கின்றனர். வளர்ப்பு பெற்றோர் அவர்களை சரியாக கவனிக்காமல் போகலாம். சமுதாயம் இழிவாகப் பார்க்கலாம்.  அவர்களுக்காக யார் இல்லை என்றாலும், கர்த்தர் அவர்களை நேசிக்கிறார். அவர்களை நேசிக்கிற ஆண்டவர் என்னை அவர்களுக்காக பயன்படுத்த விரும்புகிறார். நானே அவருடைய கைகளும் கால்களுமாக இருக்கிறேன். அவருடைய இருதயத்தை உடையவனாக நான் இருக்க விரும்புகிறார். அவர் உலகத்தை அன்புகிற வண்ணமாகவே நான் உலகத்தை நேசிக்க வேண்டும்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னைச் சுற்றிலும் நீர் வைத்திருக்கிற குழந்தைகளுக்கு உம் கரங்களைப் போல என் கைகள் இருக்கட்டும். என் வார்த்தைகள் உம் வார்த்தைகளாகவும், நீர் நேசிக்கிறது போல நானும் அவர்களை நேசிக்கவும் உதவும். ஆமென்.

No comments:

Post a Comment