Scripture வேதவசனம்: பிலிப்பியர் 1:14 சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
Observation கவனித்தல்: பவுலின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர் சிறைச்சாலையில் கட்டுண்டு இருந்ததும் கூட மற்ற விசுவாசிகளின் வாழ்க்கையில் நல்ல விளைவுகளை உண்டாக்கியது. அவர்கள் திருவசனத்தை அறிவிக்க அதிக துணிச்சலைப் பெற்றார்கள். இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் இடர்பாடுகள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.
Application பயன்பாடு: இங்கே இரு இலக்குகள் உள்ளன: முதலாவது விசுவாசிகள் என் வாழ்க்கையைக் காணு,போது, நான் இயேசுவின் ஊழியக் காரன் என்பதை எளிதில் கண்டுகொள்கின்றனர். இரண்டாவதாக, என் வாழ்க்கையை மற்றவர்கள் காணும்போது, அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பற்றி பேச தைரியம் அடைகின்றனர். அவர்கள் இயேசுவைப் பற்றி அறிவிக்க ஆபத்தையோ அல்லது உபத்திரவத்தையோ எதிர்கொள்ளும் துணிவைப் பெறுவார்களாக.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்முடையவர் என்பதை உலகம் காணும்படியாக வாழ உதவும். மேலும் என்வாழ்க்கை மற்றவர்கள் உம்மைப் பற்றிப் பேச உற்சாகமளிப்பதாக இருக்கட்டும். ஆமென்.
No comments:
Post a Comment