Scripture வேதவசனம்: பிலிப்பியர் 2: 29 ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.
30. ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.
30. ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.
Observation கவனித்தல்: பிலிப்பி பட்டணத்தில் இருந்து பவுலுக்கு உதவும்படியாக பணம் சேகரிக்கச் சென்ற நேரத்தில், எப்பாப்பிராத்து வியாதிப்பட்டார். பவுல் மூலமாக தேவன் அனேக அற்புதங்களைச் செய்திருந்தார். கண்டிப்பாக அவர் இதற்காக பலமுறை ஜெபித்திருப்பார்.
ஆனால் அவர் மரணத்திற்குச் சமீபமாய் வியாதிப்பட்டார். பவுல் எப்பாப்பிராத்துவிற்காக அதிக கவலைப்பட்டார். அவர் குணமானதற்காக மிகுந்த சந்தோசப்பட்டார். தனக்கு துக்கத்தின் மேல் துக்கம் உண்டாகாதபடிக்கு தேவன் அவரை குணமாக்கினதாக எழுதுகிறார்.
எப்பாப்பிராத்துவின் விசுவாசமின்மைக்காக பவுல் அவரை குறைகூறவில்லை. ஆனால் கிறிஸ்துவின் வேலைக்காக தன் ஜீவனையும் பணயம் வைத்தற்காக கடிந்து கொள்கிறார். அவர் காயப்பட்டதாகவும், அதற்கான பரிசைப் பெற தகுதியானவர் என்பதாகவும் எழுதுகிறார். சபையானது எப்பாப்பிராத்துவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, அப்படிப்பட்டவர்களை கனம் பண்ண வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டிருக்கிறது.
Application பயன்பாடு: எப்பாப்பிராத்து சபையால் அனுப்பப்பட்டிருந்தார், தேவனுடைய சித்தத்தைச் செய்தார்; அவர் குணமாக்கும் ஊழியம் செய்து கொண்டிருந்த அப்போஸ்தலர் பவுலுடன் இருந்தார். ஆனாலும் அவர் மரணத்திற்கேதுவான வியாதிப் பட்டார். கிட்டத்தட்ட அவர் மரிக்கும் நிலைக்குச் சென்றார். தேவனுடைய சித்தத்தில் இருப்பது என்பது வியாதியே நமக்கு வராது என்ற சான்றுறுதியைத் தருவதில்லை. வியாதிப்பட்டு கஷ்டபடுகிற இப்படிப்பட்ட ஊழியர்களை நான் கனம் பண்ண வேண்டும்.
Prayer ஜெபம் பரிசுத்த ஆவியானவரே, நான் பிரச்சனைகள் மற்றும் வியாதிகள் மத்தியில் செல்ல நேரிடும்போது என் மனப்பான்மையை சோதித்து அறியவும், மற்றவர்களை உற்சாகப்படுத்துபவனாகவும் இருக்க உதவும். ஆமென்.
No comments:
Post a Comment