Sunday, June 22, 2014

ஒருபோதும் மாறாதவர்

Scripture வேதவசனம்: சங்கீதம் 83:1 தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.
2. இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
 3. உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
4. அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

Observation கவனித்தல்: 3500 வருடங்களுக்கு முன்பாக வசித்த அதே இடத்தில் இஸ்ரவேலர் இன்று வாழ்கின்றனர்.  அவர்களைச் சுற்றி அன்று இருந்தவர்கள் கூறும் அதே காரியத்தை இன்றும் சுற்றிலும் உள்ள தேசங்கள் கூறுகின்றன. இஸ்ரவேலர்கள் முன்பு பயன்படுத்தின அதே வேதத்தை இன்றும் பயன்படுத்துகின்றனர். முன்பு இருந்த அதே வாக்குத்தத்தங்கள் இன்றும் இஸ்ரவேலருக்கு உண்டு. அன்று அவர்களைக் காத்த தேவனானவர் இன்றும் அவர்களை பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன்.
 
Application பயன்பாடு: இது மிகவும் உற்சாகப்படுத்துகிறதாக இருக்கிறதல்லவா! இஸ்ரவேலரின் தேவன் உண்மையானவர். அவரே என் தேவன். என் பாவங்களுக்காக மரிக்கும்படி அவர் அனுப்பினவரை நான் ஏற்றுக் கொண்டபடியால், நான் அவரை நம்புவதற்கு அதிக நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல, எனக்கும் உண்மையுள்ளவராக இருப்பதை நீர் நிரூபித்திருக்கிறீர். உம் பிள்ளையாக, மகனாக, நண்பராக மற்றும் உம் ஊழியனாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். ஆமென்.

No comments:

Post a Comment