Monday, June 9, 2014

பின் தொடர்பு பணி

 பின் தொடர்பு பணி
Scripture வேத வசனம்: 1 சாமுவேல் 12:23 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
Observation கவனித்தல் : சாமுவேல் திரும்பவும் தனது பணிக்கு அழைக்கப்பட்டாலும் கூட, இச்சமயத்தில் அவர் இஸ்ரவேலின் தமைமைத்துவத்தை ஒரு ராஜாவுக்கு மாற்றிக் கொடுத்து விட்டு மக்களின் புகழில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார். தனது தொட்ர்ச்சியான/பின் தொடர்புப் பணியின் முக்கியமானதொரு பகுதியாக அவர் ஜெபத்தைக் கண்டார். அதைச் செய்யாமலிருந்தால் பாவமாயிருக்கும் என்பது மிகவும் முக்கியமானதாகும். அவர் ஜெபிக்க பெலனுள்ளவராக இருந்தமட்டும் அவருடைய பணி முடியவில்லை.
Application பயன்பாடு : எனக்கு பிரியமானவர்களின் வாழ்க்கையில் உற்சாகமாக ஈடுபடுவதிலிருந்து நான் விலகி இருக்க வேண்டிய நேரங்கள் உண்டு, ஆனால் எனது வேலை முடிந்து விட்டது என்பதை அது குறிப்பதில்லை. நான் ஜெபிக்க முடியும். எனது மகன் முதன்முறையாக பள்ளிக்கூடம் போகும் போது ம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் நான் ஜெபிக்கலாம். நான் வேலைக்காக வீட்டைவிட்டுச் செல்லும் போது நான் ஜெபிக்க முடியும். ஒரு நாளோ அல்லது வருடமோ நான் வீட்டில் இல்லாமல் இருக்க வேண்டியது வந்தால், நான் ஜெபிக்க முடியும். இன்னொரு பராமரிப்பாளரிடம் பிரச்சனை ஒப்படைக்கப் படும்போது நான் ஜெபிக்க முடியும். எனக்கு ஜெபிப்பதற்கு நேரமில்லாமல் நான் அவர்களுக்கு உதவுவதில் மும்முரமாக செலவழித்த சக்தியைக் காட்டிலும் அதிகமாக என் ஜெபங்கள் உதவிகரமாக இருக்கக் கூடும். நான் ஜெபிக்காத வரைக்கும் எந்தவிதமான பின் தொடர்புப் பணியும் முழுமையானது அல்ல.
Prayer ஜெபம் : ஆண்டவரே, நான் ஜெபிக்காத வரைக்கும் எனது வேலை முடிவடைவதில்லை. ஜெபிக்கும்படிக்கு என் மனதில் எண்ணத்தைத் தாரும். ஆமென்!

No comments:

Post a Comment