Saturday, June 7, 2014

தேவனுடைய மகத்தான திட்டம்

Scripture வேதவசனம்: எபேசியர் 3:10  உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
11. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

Observation கவனித்தல்: தேவன் வல்லவர் என்பதை அனைத்து சிருஷ்டிகளும் காண முடியும். ஆனால் தேவன் தாம் அன்புள்ளவர் என்பதை அனைவரும் காண   விரும்புகிறார். தேவன் மனிதனுடன் இடைபடுவதற்கான உயரிய நோக்கம் இதுவே. தேவன் தாம் நேசித்த பாவ மனிதனை, பாவத்தின் அழிவில் இருந்து காப்பாற்ற தேவன் கண்ட ஞானமான வழி இது. பாவத்தில் விழுந்துபோன மனிதன் பரிசுத்தமுள்ள கனமான ஒரு இடத்திற்கு உயர்த்தப்படுவதை தேவன் சாத்தியமாக்கினார். அவர் மனிதனுடைய பாவத்தைச் சுமந்தார், ஆனால் பாவியாகவில்லை. அவர் உலத்தின் பாவத்திற்காக மரித்தார், ஆயினும் மரணம் அவரை ஜெயிக்க முடியவில்லை. 
நியாயத்தீர்ப்பு நாளில், தேவன் பாரபட்சம் செய்ததாக எந்த மனுசனும் அவரை குற்றம் சாட்ட முடியாது. இயேசுவை ஆண்டவராகவும் இரட்சராகவும் ஏற்றுக் கொண்ட அனைவரது பாவங்களுக்கும் தேவ குமாரனாகியஇயேசு கிறிஸ்து சிலுவையில் செலுத்திய விலை போதுமானதாக இருக்கிறது என்பதை தெளிவாக காணமுடியும்.
 
Application பயன்பாடு: தேவன் தம் மிகுந்த ஞானத்தில், நான் பாவியாயிருக்கையிலேயே, கிறிஸ்துவை எனக்காக மரிக்கச் செய்து என் மீதான அவரது பேரன்பை காட்டினார்.  (ரோமர் 5:8 ஐ பார்க்கவும்)         
 
Prayer ஜெபம்: பரலோகப் பிதாவே, உம் ஞானம், அன்பு மற்றும் உம் திட்டம் ஆகியவை எவ்வளவு ஞானமானது! இதின் நானும் இணைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம். இயேசுவே என் பாவங்களுக்காக மரித்ததற்காக நன்றி.  பாவத்தின் விளைவுகளில் இருந்து என்னை மீட்டதற்காக நன்றி. நீரே என் இரட்சகர். ஆமென்.
 

No comments:

Post a Comment