Friday, July 4, 2014

என் தேவை எல்லாம் ஏசுவே

Scripture வேத்வசனம்: எபிரேயர் 2:18 ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

Observation கவனித்தல்:    இயேசு ஒரு மனிதனாக இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில், சோதிக்கப்பட்டு பாடுபட்டபடியினால், அவர் இப்பொழுது சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.  யாரோ ஒருவர் சொன்னதினாலோ, புத்தகத்தில் வாசித்ததினாலோ, யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது கேட்டதினாலோ அல்லாது, அவர் தாமே சோதனைகளை அனுபவித்த படியால், அவர் நம் சோதனைகளை அறிந்திருக்கிறார்.
 
Application பயன்பாடு: இயேசு எனக்கு உதவ முடியும். ஏனெனில், அவர் பிசாசுகளை சமாளித்திருக்கிறார், அவர் பிசாசை எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதை அறிந்திருகிறார். மனிதனுடைய பலவீனம் மற்றும் பலம் ஆகியவைகளை அவர் அறிந்திருக்கிற படியால் அவர் எனக்கு உதவ முடியும். நாம் நம் மாம்சத்தைச் சார்ந்திருக்க முடியாது என்பதை அவர் அறிந்திருக்கிறபடியால், நமக்கு பரிசுத்த ஆவியை அளித்திருகிறார்.  அவர் தன் சோதனைகள் எல்லாவற்றையும் கடந்து வந்த படியால், எனக்கு உதவி செய்வதில் இருந்து அவர் கவனம் திரும்பாது.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, எனக்கு உதவி செய்வதற்கு நீர் நான் நினைப்பதைக் காட்டிலும் வல்லவராக இருக்கிறீர். ஆமென். 

No comments:

Post a Comment