Wednesday, June 4, 2014

என் உதவி

Scripture வேதவசனம்: சங்கீதம் 60:9 அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?
10. எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ?
11. இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
12. தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

Observation கவனித்தல்: இஸ்ரவேல் பாவம் செய்தபடியால் உதவி கேட்ட அவர்களுக்கு தேவன் செவிகொடுக்கவில்லை.  அவர்கள் தேவனை நம்பி இருந்தது போல மனிதர்களை நம்பி இருக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டனர்.  இங்கே சங்கீதக்காரன் மனிதர்களிடம் இருந்து அவர்கள் பெற்ற உதவி வீணாக இருந்தது என்கிறார். அவர்களுக்கு தேவன் தேவை, ஏனெனில் அவர் போதுமானவர்.
 
Application பயன்பாடு: நான் மனிதனிடம் அதிக எதிர்பார்ப்பு வைக்கும்போது,  இந்த வேதபகுதியில் காணப்படும் உண்மையை நான் காண்கிறேன். தேவன் மேல் என் நம்பிக்கை இருக்கும்போது, ஒரு மனிதன் எனக்கு உதவக் கூடுமானால், நான் மகிழலாம். ஆனால் நான் எதிர்பார்த்த இடத்திலிருந்து அது வரவில்லை எனில், நான் மகிழ முடியாது.  தேவன் உதவுவதற்கான வழிகளை அறிந்திருக்கிறார். சங்கீதக்காரனுடன் கூட சேர்ந்து நானும், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” என்று சொல்ல முடியும் (சங் 121:2)    
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் ஏமாற்றமடையாமல் எதிர்பார்க்கக் கூடிய ஒருவர் நீர் மாத்திரமே எனக்கு உதவும்படி மக்களுக்கு நான் அழுத்தம் கொடுக்கும்போது என்னை நிறுத்தும். நீரே எனக்கு எப்போதும் உதவி அளிக்கக் கூடியவர். ஆமென்.
 

No comments:

Post a Comment