Wednesday, July 16, 2014

அன்பு தகப்பனின் ஒழுங்கு

Scripture வேதவசனம்: எபிரேயர் 12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
8. எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

Observation கவனித்தல்: எல்லோரும் சிட்சைகுட்பட்டவர்களாக இருந்தால், தேவனால் சிட்சிக்கப்பட்டும் அதன் காரணம் அறியாதவர்களாக இருந்தால் அது எவ்வளவு வருந்தத்தக்க காரியம் ஆகும். எல்லா கடினமான சூழ்நிலைகளும் சிட்சை என்று நான் சொல்லவில்லை,  ஆனால் சில சூழ்நிலைகள் நிச்சயமாக சிட்சைதான். நம் தேசத்தின் அனேக பிரச்சனைகளுக்குக் காரணம், நாம் தேவனையும் அவருடைய பிரமாணங்களையும் விட்டுவிட்டதுதான். 
தேவனிடம் இருந்து ஒருதடவை கூட, “இல்லை” அல்லது நிறுத்து என்ற வழிநடத்துதலைப் பெறாதவர்கள், அவரை ஒரு தகப்பனாக அறியாதவர்களாக இருக்கக் கூடும்.
 
Applicatin பயன்பாடு: நான் கடினமான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது, நான் தேவனுக்குக் கவனமாக செவிகொடுக்க வேண்டும். நான் பாவ உலகில் வாழ்கிறபடியால், அவர் எனக்கு உதவுவார் என்று நான் நம்ப முடியு ம். நான் அவருக்கு கீழ்ப்படியாமல் இருந்தால், நான் என் பாவங்களை அறிக்கை செய்து, அவருடைய மன்னிப்பைப் பெற வேண்டும்.  நான் திரும்பவும் அவற்றிற்காக சிட்சிக்கப்படக் கூடாது என்பதை கற்றுக் கொள்வது அவசியம். 
 
Prayer ஜெபம்: கர்த்தாவே,  பாவத்தின் விளைவை நீர் அறிந்திருக்கிறீர்.  நான் பாவத்தில் நிலைத்திருப்பதை நீர் விரும்புகிறதில்லை. ஏனெனில் என்னை நீர் நேசிக்கிறீர்.உம் சிட்சைக்காக நன்றி. ஆமென்.
 

No comments:

Post a Comment