Scripture வேதவசனம்: யாக்கோபு 3:7 சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள்
ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு.
8. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
9. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

Observation கவனித்தல்: தேவன் தமது சாயலாகவும், ரூபத்திலும் மனிதனைப் படைத்தார் என்று நம்புபவர்கள் தாங்கள் பேசும்விதத்திலும் மற்றவர்களைப் பற்றிப் பேசும்போதும் அதைக் காண்பிக்க வேண்டும். ஒரு ,அமிதனைப் பற்றி தவறாகப் பேசுவதோ அல்லது சபிப்பதோ அது தேவனை அவமானப்படுத்துவதாகும். நம்மைப் சபிப்பவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசு சொன்னதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. (லூக்கா.6:28).
Application பயன்பாடு: என்னை தவறாக நடத்துபவர்களிடம் கனிவாகப் பேசுவது அவர்கள் செயலை நியாயப்படுத்தாது. எனக்கும் மன்னிப்பு தேவை என்பதியும், மன்னிக்கிறவரான தேவன் எனக்குள் வசிக்கிறார் என்பதையும் காட்டுகிறது. அவர்கள் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற படியால் அவர்கள் மதிக்கப்படவேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, ஒவ்வொருவரிலும் இருக்கிற உம் சாயலை அடையாளம் காண உதவும். அவர்களை மரியாதையுடன் நடத்த எனக்கு நினைவுபடுத்தும். ஆமென்.
No comments:
Post a Comment