Sunday, July 20, 2014

உயர்த்துவது அவர் வேலை

Scripture வேதவசனம்: யாக்கோபு 4:10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

Observation கவனித்தல்:  மற்றவர்கள் நம்மைப் புகழ்ந்து, நம்மைப் பற்றி உயர்வாகப் பேசும்போது மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் யார் அதைச் சொல்கிறார் என்பதை வைத்து அது ஒரு பெரிய வித்தியாசத்தைக் காண்பிக்கும். மகிமையின் ராஜாவானவர் நம்மை கவனித்து, நலமானதைச் சொல்வது எவ்வளவு ஆசீர்வாதமானது! மத்தேயு2:12 மற்றும் 1 பேதுரு 5:6 வசனங்களிலும் இதே போன்ற வசனங்களைக் காண்கிறோம். பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு வசனங்கள் இந்தச் சிந்தனையின் எதிர்மறையையும் உள்ளடக்கி இருக்கிறது-பெருமையுள்ளவர்களை தேவன் தாழ்த்துகிறார்.
 
Application பயன்பாடு: நான் எவ்வளவு அதிகமாக தேவனை அறிகிறேனோ, அவ்வளவாய் நான் தாழ்மையுள்ளவனாக இருக்கிறேன். அவர் மகாபெரியவர், ஞானமுள்ளவர், மிகவும் அன்பானவர், பரிசுத்தமானவர் மிகவும் வல்லமை உள்ளவர். ஆகவே பெருமை என் இருதயத்தில் இருக்க இடமிராது. அவர் எனக்காக செய்தவைகளை நான் அறிந்து கொள்ளும்போது, நான் இயல்பாகவே தாழ்மை உள்ளவனாவேன். தேவன் என்னைக் கவனித்து உயர்த்துவார் என்பது எவ்வளவு ஆச்சரியமான சிந்தனை.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் ஆச்சரியமானவர்.  உம் செயல்கள் மட்டுமல்ல, உம் குணாதிசயமும் நீர் உருவாக்கினவைகளில் எல்லாம் மேலானதாக இருக்கிறது. ஆமென்.

No comments:

Post a Comment