Scripture வேதவசனம்: 1 பேதுரு1:14
1Peter (NIV) 1:14 நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,
15. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
16. நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
Observation கவனித்தல்: நம் சமுதாயத்தில் முன்மாதிரிகளாக இருப்பவர்கள் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். விளையாட்டுவீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், இசைக் கலைஞர்கள் ஆகிய அனைவரும், “நான் செய்வது போல செய்யுங்கள், நான் பேசுவது போல பேசுங்கள்” என்று மக்களுக்குச் சொல்வது போல காணப்படுகிறது. வியாபாரிகள் இப்படிப்பட்டவர்களை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
Application பயன்பாடு: நான் என்னைச் சுற்றிலும் உள்ள உலகத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் இருக்க வேண்டும். நான் தேவனுடைய சாயலாக என்னை மாற்ற வேண்டும். நான் இன்று சாப்பிடுவதைக் காட்டிலும், உடுத்துவதைக் காட்டிலும், பரிசுத்தமாக வாழ்வது மிகவும் முக்கியமானது. வெளியில் இருந்தோ வரும் உலக அழுத்தத்திற்கா அல்லது உள்ளேயிருந்து வரும் தேவனுடைய அழுத்தத்திற்கா, நான் எதற்கு கீழ்ப்படிகிறேன்?
Prayer ஜெபம்: கர்த்தாவே, மற்றவர்கள் என்னைப் பார்க்கும்போதும், என் பேச்சைக் கேட்கும்போதும் எனக்குள் வசிக்கும் உம்மை அவர்கள் காணட்டும். ஆமென்.
No comments:
Post a Comment