Thursday, July 24, 2014

ஒரு கிறிஸ்தவனாக பாடுபடுதல்

Scripture வேதவசனம்: 1 பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். 15. ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. 16. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்... 19. ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 

Observation கவனித்தல்: விசுவாசிகளுக்குள் வசிக்கும் தேவ ஆவியானவர் நம் வாழ்க்கையில் உண்டாக்கும் மாற்றத்தை மற்றவர்கள் காணமுடியும். சிலர் புதிய மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் உதாரத்துவ குணத்தையும் கண்டடையலாம். ஆனால் அதற்கு முன்பதாக, நாம் தேவன் விரும்புகிற வண்ணம் வாழ முயற்சிக்கும்போது அதினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.  அவர்கள் நம் பிரசன்னத்தினால், நமக்குள் இருக்கும் அவருடைய பிரசன்னத்தினால் உணர்த்தப்படுவார்கள். அவர்கள் நம்மை கோபப்படுத்த அல்லது சபிக்கக் கூடுமானால்,  அது அவர்களு ஒரு நியாயத்தையும் திருப்தியையும் கொடுக்கக் கூடும்.
 
Application பயன்பாடு: ஒரு கிறிஸ்தவனாக பாடுபடுவதில் நான்கு காரியங்கள் இருக்கிறதை நான் காண்கிறேன். முதலாவது, நான் அதை அவமானமாக எண்ணாமல் கனத்திற்குரியதாக எண்ண வேண்டும். இரண்டாவதாக, தேவனின் பிரதிநிதியாக இருப்பதற்காக நான் அவரை துதிக்க வேண்டும். மூன்றாவதாக என் வாழ்வின் நோக்கம் அவரை மகிமைப்படுத்துவதே என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். நான்காவதாக, நான் சரியானவைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் மகிமையின் ஆவியானவர் என்னில் தங்குவாராக. தொடர்ந்து நன்மையானவைகளைச் செய்யவும் உமக்காக வாழவும் எனக்கு உதவும். ஆமென்.

No comments:

Post a Comment