Sunday, July 27, 2014

எப்பேர்ப்பட்ட தேவன்

Scripture வேதவசனம்: ஏசாயா 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
 8. அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

Observation கவனித்தல்: தேவனுடைய குணாதிசயம் இந்த வசனங்களில் பொன்னாக மிளிர்கிறது. நியாயத்தீர்ப்பு கைவிடுதலைக் கொண்டு வந்தது. ஆனால் மீட்பும் அதைத் தொடர்ந்து வந்தது. கைவிடுதல் உருக்கமான இரக்கங்களினால் திரும்பப்பெறப்பட்டது. இமைப் பொழுது கோபம் நித்திய கிருபையினால் சரிசெய்யப்பட்டது. அவருடைய வாக்குத்தத்தங்கள் மிகவும் உறுதியானவை: ”உன்னைச் சேர்த்துக்கொள்வேன்...உனக்கு இரங்குவேன்” தேவையான நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்த பரிசுத்த தேவன், தம் இரக்கத்தினால் திரும்பவும் சேர்த்துக் கொள்கிற அன்பின் தேவனாகவும் இருக்கிறார்.
 
Application பயன்பாடு:  என் தேவன் இப்படிப்பட்டவர்! அவரை சேவிப்பது என் பாக்கியம். அவர் தம் பரிசுத்தத்தின் என்னை சிட்சிகிறார். அன்பிலோ என்னை மறுபடியும் சேர்த்துக் கொள்கிறார்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மை நான் அதிகமதிகமாய் அறிந்து கொள்கையில், நான் ஊழியனாக என்னை தாழ்த்துகிறேன்.  உம் ஊழியனாக இருப்பது மிகவும் கனமானது! ஆமென்.

No comments:

Post a Comment