Monday, July 28, 2014

தொடர்ந்து வளருதல்

Scripture வேதவசனம்:  2 பேதுரு  3:18  நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

Observation கவனித்தல்: வாகனம் ஓட்டும்போது நம் நண்பர்கள் “கவனமாக ஓட்டுங்கள்” என்று சொல்வது   பொதுவான ஒன்று. அது நாம் சுகபத்திரமாக பயணம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் கரிசனையை  காண்பிப்பதாக இருக்கிறது. ஸ்பானியர்கள் “கடவுளுடன் கடந்து செல்லுங்கள்” என்று சொல்வார்கள். அப்போஸ்தலன் பேதுரு தன் இரண்டாவது நிருபத்தின் முடிவில், “வளருவதை நிறுத்திவிடாதிருங்கள்” என்று சபையை உற்சாகப்படுத்த சொல்வது போல இருக்கிறது.  எப்பொழுதுமே நாம் அறிய வேண்டியவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தேவனுடைய கிருபை மற்றும் இயேசுகிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவில் நீங்கள் ஒருபோதும் களைத்து போகமாட்டீர்கள்.
 
Application பயன்பாடு: தேவனுடைய வார்த்தையை அறிகிற அறிவில் உள்ள வாஞ்சையை நான் ஒருபோதும் இழந்து போக மாட்டேன். நான் அதைப் பெற்றுக் கொள்வதற்கான என் திறன் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இயேசுவைப் பற்றி அறிவதிலும், அவருடன் வாழ்வதிலும் வளர விரும்புகிறேன்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் இந்த வாழ்க்கையை உம்முடன் இணைந்து வாழ்கிறேன். நான் கற்றுக் கொள்ள அனேகம் உண்டு. அனுதினமும் வளர உதவும். ஆமென்.

No comments:

Post a Comment