Wednesday, July 30, 2014

இயேசுவின் பிரசன்னத்தை உணருதல்

Scripture வேதவசனம்: யோவான் 1:10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.
11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

Observation கவனித்தல்:   இயேசு இந்த உலகைப் படைத்தார். ஆயினும் அவர் இந்த உலகில் ஒரு குழந்தையாக, மீகா தீர்க்கதரிசனமாக சொல்லிய படி பெத்லெகேமில் கன்னி மரியாளிடம் பிறந்த போது, தூதர்கள் அறிவித்தபோது, இந்த உலகம் அவரை அறிந்து கொள்ள வில்லை. இயேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைப் பெற்ற யூதர்களும் கூட அவரை அடையாளம் கண்டுகொள்ள வில்லை. பழைய ஏற்ப்பாட்டை நன்கு அறிந்திருக்கக் கூடிய மத தலைவர்களும் அவரை ஏற்றுக் கொள்ள வில்லை, மாறாக அவரை மரணத்திற்குள்ளாக்க மக்களைத் தூண்டினர்.   
 
Application பயன்பாடு:   நான் மேற்கண்ட வசனங்களை வாசிக்கும்போது, நானும்  சில வேளைகளில் இயேசுவை அறிந்து கொள்ள முடியாதபடி என் வேலைகளில் முழு கவனம் செலுத்துவதை உணர்கிறேன். அவர் எனக்காக வந்தார், நான் அவருடையவன் என்று சொந்தம் பாராட்டுகிறேன். ஆனால் அவருடைய பிரசன்னத்தை நான் உணரவில்லை. நான் என் விசுவாசத்தை செயல்படுத்தக்கூடிய வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். ஆகவே நான் இயேசுவை  உடனே அடையாளம் காணவும், என் சூழ்நிலைகளில் அவரை என் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  எப்பொழுதும் நான் உம் பிரசன்னத்தைப் பற்றிய உணர்வுடன் இருக்க உதவும். நான் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, உம் பிரசன்னமே என் முதல் சிந்தனையாக இருக்கட்டும். ஆமென்.

No comments:

Post a Comment