Friday, August 1, 2014

எதை நான் தெரிந்து கொள்கிறேன்

Scriptureவேதவசனம்: ஏசாயா 66:2  கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
3. மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
4. நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.

Observation கவனித்தல்:  இங்கே தேவனுடைய தெரிவுகள் நம் தெரிந்துகொள்ளுதலைச் சார்ந்து இருப்பதைக் காண்கிறோம். அவர்கள்...தெரிந்து கொண்டதினிமித்தம்...நானும்...தெரிந்து கொண்டு.. என்று சொல்கிறதைப் பார்க்கிறோம். நம்மைப் பற்றியவை அனேக விபரங்களை நம் தெரிவுகள், விசுவாசம், நம் ஒழுக்கம், நம் நம்பிக்கைகள்  மற்றும் முன்னுரிமைகளில் இருந்து கண்டுகொள்ள முடியும். 
 
Application பயன்பாடு:   தேவன் வெறுக்கிற ஆனால் எனக்குப் பிரியமானவைகளைச் செய்வதற்குப் பதிலாக, நான் மனம் திரும்பி தேவனுடைய வார்த்தையை நேசிப்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும். 
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் தவறாக செய்தவைகளுக்காக வருந்துகிறேன்.அனுதினமும் வேதாகமத்தை வாசித்து, உம் வார்த்தையைக் கேட்டு செவிகொடுக்க வேண்டும் என்ற உம் விருப்பதை நிறைவேற்ற விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment