Scripture வேதவசனம்: யோவான் 4:30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
31. இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
32. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
33. அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
34. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

Observation கவனித்தல்: சீடர்கள் இயேசுவின் சரீர பசியை தீர்ப்பதில் கவனமாயிருந்தனர். ஆனால் அவர்கள் உணவு வாங்குவதற்காக சென்ற நேரத்தில், இயேசு தன்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் ஊழியம் செய்தார். பிதாவானவர் தன்னை அனுப்பிய நோக்கத்தைச் செய்வதின் மூலமாக அவர் பெற்ற ஆவிக்குரிய திருப்தியானது சரீர பசியை விட மேலானதாக இருந்தது.
Application பயன்பாடு: நானும் கூட என் சரீர பசியை விட என் ஆவிக்குரிய திருப்தியே முக்கியம் என்று அனேக தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். சில சமயங்களில் அட நான் இன்னும் சாப்பிடவில்லையே என்று தாமதமாக உணருவேன். தேவன் நியமித்த காரியங்களை அச்சமயத்தில் செய்வதே முதன்மையானதாக இருந்திருக்கிறது. மற்றவைகள் அச்சமயத்தில் ஒரு பொருட்டல்ல.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தர - உம் சித்தத்தைச் செய்வதே என் முதல் இலட்சிய விருப்பம். நீர் என் மேல் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆமென்.
No comments:
Post a Comment