Scripture வேதவசனம்: யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
கவனிக்க: யோவான் 13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
கவனிக்க: யோவான் 13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
Observation கவனித்தல்: யோவான் 13ல் நாம் ஒருவரிலொருவர் கொண்டிருக்கும் அன்பே நாம் ஆண்டவரின் சீடர்க என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது என்று காண்கிறோம். யோவான் 15ல் நாம் கனிகொடுப்பதும் ஒரு நிரூபணமாக இருப்பதைக் காண்கிறோம். கனியானது ஒரு மரத்தின் தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இயேசு ஒரு மனிதனுக்குள் வாழும்போது, அவர்களின் செயல்களில் அவர் அவர்களுக்குள் இருப்பது நிரூபணமாக இருக்கும். அவர்கள் பேசுவதும், செயல்படுவதும் இயேசு அவர்களுக்குள் இருப்பதை நிரூபிக்கும். ஒருவர் அதிக கனிகளைக் கொடுக்கும்போது, நம் பரம பிதா அதிக மகிமையடைகிறார்.
Application பயன்பாடு: கனியானது சரியான பக்குவத்திற்கு வர ஒரு காலம் உண்டு. அது ஒரு தொடர்ந்தேர்ச்சியான செயல். முதலில் அது முதிர்ச்சி அடைவது போல தெரியாது. ஆனால் நான் தொடர்ந்து தேவன் செயல்பட இடம் கொடுக்கும்போது அவர் அதிக கனிகளைத் தரச் செய்கிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம் சீடன் என்பதை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளும்படியாக, போதுமான கனிகள் என்னில் காணப்பட ஜெபிக்கிறேன். நான் அதிக கனி தரவேண்டும் என்பதே உம் ஆசை. ஆமென்.
No comments:
Post a Comment