Scripture வேதவசனம்: எரேமியா 26:3 அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய
நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு,
அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.
36:3 யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிக்கும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக் குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார்.

Observation கவனித்தல்: இங்கே ஒரு பெற்றோரின் இருதயத்தில் வரும் உள்ளான போராட்டம் தேவனுடைய இருதயத்திலும் இருப்பதை நாம் காண்கிறோம். பெற்றோர் தம் பிள்ளைக்கு தண்டனை தேவை என்று அறிந்திருந்தாலும், அதைச் செய்ய மனமற்றி இருப்பார்கள். ஆகவே, அவர்கள் தண்டிப்பதாக பயமுறுத்தி, குழந்தைக்கு மற்றுமொரு வாய்ப்பை கீழ்ப்படிவதற்கு அளிப்பர். குழந்தையைத் தண்டிப்பது என்பது அவர்கள் செய்ய விரும்பாத ஒரு செயலாக இருக்கும். அவர்கள் தண்டிப்பதைக் காட்டிலும் மன்னிப்பதையே விரும்புவர்.
Application பயன்பாடு: தேவன் மிகவும் பரிசுத்தமானவர். ஆகவே அவருடைய பிள்ளைகள் பாவம் செய்யும்போது தண்டிப்பது என்பற்கு கேள்வியே இல்லை. அதே வேளையில் தேவன் மிகவும் அன்பானவர். ஆகவே அவர் தம் பிள்ளைகள் கீழ்ப்படியும்போது அவர்களை மன்னிக்க விரும்புகிறார்.
Prayer ஜெபம்: பரலோகப் பிதாவே. என்னை நேசிப்பதற்காக நன்றி. உம் பரிசுத்தத்தைப் புறக்கணித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உமக்குக் கீழ்ப்படியவே விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment