Thursday, August 7, 2014

வார்த்தைகள் மற்றும் செயல்கள்

Scripture வேதவசனம்: யோவான் 10:20 அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.21. வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்...
37 (இயேசு) என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. 38. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

Observation கவனித்தல்: இயேசு சொன்னதை எதிர்த்துக் கேள்விக்கேட்டவர்களால், அவரது செயல்களை எதிர்க்க முடியவில்லை. அவருடைய செயல்கள் அவருடைய வார்த்தைகளை நிரூபித்தது.  இயேசுவும் தம் செயல்களைக் கவனித்துப் பார்க்கும்படிச் சொன்னார்.  இன்றைய கிறிஸ்தவர்கள் தன்னைச் சுற்றிலும் இருப்பவர்களிடம், என் செயல்கள் நான் ஒரு கிறிஸ்தவன் என்று காண்பிக்கவில்லை எனில் நான் சொல்பவைகளை விசுவாசிக்க வேண்டாம்” என்று சொன்னால் எப்படி இருக்கும்.
 
Application பயன்பாடு: நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இயேசுவுக்கு அது உண்மையாக இருப்பது போலவே எனக்கும் இருக்கிறது. ஜனங்கள் நான் வாழ்வதையும் நான் செய்வதையும் நம்பாவிடில், நான் சொல்வதையும் நம்ப மாட்டார்கள்.
 
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, இயேசு என்னில் வாழ உதவி செய்யும். நான் இயேசுவைப் பற்றி பேசும்போது ஜனங்கள் ஆச்சரியப்படுவார்களாக. ஆமென்.

No comments:

Post a Comment