Wednesday, August 20, 2014

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல்

Scripture வேதவசனம்: 1 யோவான் 1:4 உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.

Observation கவனித்தல்:   கிறிஸ்தவ வாழ்வில் மகிழ்ச்சியானது மிகவும் முக்கியமானது ஆகும். நல்ல விளைநிலமும், ஆரோக்கியமான மந்தையும் விவசாயியின் தன்மையைப் பற்றிச் சொல்வது போல, கிறிஸ்தவரின் வாழ்வில் உள்ள மகிழ்ச்சியானது தேவனைப் பற்றி சொல்வதாக இருக்கிறது.  நம் வாழ்வில் தேவன் செய்யும் செயல் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது. ஆனால் அம்மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுமளவும் அது முழுமையானதாக இருக்காது.
 
Application பயன்பாடு: என் வாழ்வில் உள்ள மகிழ்ச்சியானது நான் என்ன அன்பினால் ஆளுகை செய்கிற அற்புதமான ஆண்டவரைப் பெற்றிருக்கிறேன் என்பதை மக்களுக்குச் சொல்கிறது.   ஆயினும் நான் அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்போதுதான் அது முழுமையான மகிழ்ச்சியாக மாறுகிறது.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்குத் தந்திருப்பவைகளை நான் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை தவற விடாதபடிக்கு எனக்கு உதவும். ஆமென்.

No comments:

Post a Comment