Thursday, September 4, 2014

அளவுகோல்

Scripture வேதவசனம்: எசேக்கியேல்  22:12  இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Observation கவனித்தல்: அவர்கள் தீமை செய்வது என்பதை நினைவு கூர்ந்தார்கள், ஆனால் மிகவும் முக்கியமானதானதை அவர்கள் மறந்தே போனார்கள். அவர்கள் நன்மை மற்றும் தீமைக்கான சரியான அளவு அவர்களிடம் இல்லை.
 
Application பயன்பாடு: நாம் தேவனை மறக்கும்போது, நாம் உண்மையைப் பற்றிய எல்லாவற்றையும் இழந்துவிடுகிறோம். நன்மை மற்றும் தீமையை அளவிடும் அளவுகோலை நாம் இழந்துவிடுகிறோம். இந்த் அளவுகோலை நாம் இழந்தபடியால், மற்றவர்கள் செய்வதை வைத்து நாம் தீமையை அளக்கிறோம். நம்மை விட மோசமானவர்களை நாம் பார்த்துக்கொண்டிருக்குமட்டும், நாம் செய்வதெல்லாம் சரி என்று எண்ணிக் கொள்கிறோம்.

Prayer ஜெபம்: பரலோகப் பிதாவே,   உம் பரிபூரண பரிசுத்தத்தின்படி மனிதர்கள் அளவிடப்படும்போது இவ்வுலகில் எவ்வளவு பெரிய விழிப்புணர்வு உண்டாகும். உம் குமாரனுடைய நீதியினால் மனிதர் இருதயங்கள் நிரப்பப்படும்போது எவ்வளவு அதிகமாக உமக்கு நன்றி  செலுத்தப்படும். ஆமென்.

No comments:

Post a Comment