Scripture வேதவசனம்:
Habakkuk (NIV) 3:2 கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே,
வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின்
நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
Observation கவனித்தல்: இந்த புத்தகமானது, தேவன் ஏன் தன்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்கள் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்ய அனுமதிக்கிறார் என ஆபகூக் கேட்பதில் துவங்குகிறது. தேவன் தம் தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கிடம், பாபிலோனியரை அனுப்பி தம் ஜனங்களை தண்டிப்பதாக சொன்னார். பின் தீர்க்கதரிசி அதைக் காட்டிலும் அதிக கவலை கொண்டார். தேவன் ஏன் பக்தியற்றவர்களைக் கொண்டு பக்தியுள்ள ஜனங்களை தண்டிக்க வேண்டும். தேவன் இஸ்ரவேலுக்கு ஒரு எதிர்கால திட்டம் வைத்திருந்தார். பாபிலோனியர்கள் இஸ்ரவேலைத் தண்டிக்கவும், சீர்ப்படுத்தவும் தேவன் பயன்படுத்துகிற கருவியாக இருப்பார்கள். அது இஸ்ரவேலைப் பாதுகாக்க பயன்படும். தேவன் இஸ்ரவேல் மூலமாக ஒரு இரட்சகரை அனுப்பப் போகிறார். ஆனால் பாபிலோன் மீது வரும் தேவ தண்டனை அதை சரிசெய்ய அல்ல, அதை அழித்துவிடும்.
Application பயன்பாடு: அமெரிக்க தேசமானது நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க தேவனால் பயன்படுத்தப் படுவதற்காக அவர் உருவாக்கிய தேசம். அனேக விதங்களில் அது உலக அமைதிக்காக ஒரு காலத்தில் பாடுபட்டாலும், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அது தன் பலத்தை இழந்துவருகிறது. ஏனெனில் தேசத்திற்குள்ளேயே நீதி இல்லை. பாதுகாப்பு இல்லை. அனேகர் அயல்நாடுகளில் இருந்து குடிவருகின்றனர். கர்த்தர் வரும் போது அவர்களும் ஆண்டவரைச் சந்திக்க ஆயத்தமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் நியாயத் தீர்ப்புகள் எம் தேசம் மீது வரும்போது, இரக்கத்தைக் காண்பியும். ஆமென்.
No comments:
Post a Comment