Friday, September 5, 2014

உரிய கனத்தைச் செலுத்துதல்

Scripture வேதவசனம்:  எசேக்கியேல் 28:15  நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
16. உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
17. உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

Observation கவனித்தல்: தீருவில் தன்னையே கடவுள் என அறிவித்துக் கொண்ட ராஜாவைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்வதிலிருந்து, அந்த இராஜாவிற்குப் பின் இருந்த தீய சக்தியாகிய சாத்தானைப் பற்றி பரிசுத்த ஆவியானவரின் அபிசேகத்தினால் எழுதி இருக்கிறார் என்று நம்புகிறேன். எல்லா சிருஷ்டிகளிலும்  முதன்மையானவனாக குறையற்றவனாக சாத்தான் உண்டாக்கப்பட்டான். ஆனால் அவர் சிருஷ்டிகரைக் கவனிக்காகல், சிருஷ்டிகளைப் பார்த்து தன் அழகைக் குறித்து மனமேட்டிமையுள்ளவனானான்,
 
Application பயன்பாடு :   நம் திறமைகள் மற்றும் தாலந்துகளுக்கான அங்கீகாரத்தை எடுத்துக் கொள்வது எளிது.  ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்ட சரீரத்தை நான் அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. ஆயினும் நான் தேவனை மகிமைப்படுத்துவதற்காக அதை பயன்படுத்த முடியும்.  ஒருவேளை இன்று நான் அனேகரைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் சந்திக்கிற ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையில் நன்மையானதாக இருக்கும்படிச் செய்ய முடியும். 
 
Prayer ஜெபம்: பரம பிதாவே,  நீர் எனக்கு தந்திருக்கிறவைகளுக்காக நன்றி. நான் என் உடலையும் திறமைகளையும் உம் மகிமைக்காக பயன்படுத்த உதவும். நான் இன்று படுக்கச் செல்லும்போது நான் பெற்ற மகிமை அனைத்தையும் உமக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்கிறேன். நான் இன்று உம்மை அதிகமாக மகிமைப்படுத்தவும் பேசவும் கிருபை செய்யும். ஆமென்.

No comments:

Post a Comment