Wednesday, September 10, 2014

நான் எதை நினைவு கூர்கிறேன்?

Scripture வேதவசனம்:   புலம்பல் 3:19. எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
20. என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
21. இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.
22. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
23. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
24. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

Observation கவனித்தல்: நம் நினைவுக்கு பிரச்சனைகளே எளிதில் வருவது போல காணப்படுகிறது. நாம் பிரச்சனையை நினைவுகூர கஷ்டப்படவேண்டியதில்லை. நம் மனது அதைப் பற்றி தானாகவே சிந்திப்பதற்கு புரோகிராம் செய்யப்பட்டிருப்பது போல செயல்படுகிறது. நம் வாழ்வில் வந்த மோசமான காரியங்களை நாம் சிந்திக்கும்போது, நாம் மன அழுத்தத்திற்குள்ளாகிறோம்.  ஆனால் கர்த்தரை அறிந்தவர்கள் நினைவுக்குக் கொண்டு வரவேண்டிய ஒன்று உண்டு. நான் பிரச்சனையைப் பற்றிச் சிந்தித்து கஷ்டப்படுவதற்குப் பதிலாக, வேறு ஒன்றை அதன் இடத்தில் வைத்து என் சிந்தனைகளை நிரப்ப முடியும்.
 
Application பயன்பாடு:  இன்று நான் ஆண்டவரின் மகா பெரிய அன்பை ஒருபோதும் கைவிடா அவருடைய மனதுருக்கம் அவருடைய உண்மை ஆகியவைகளைச் சிந்தித்து நம்பிக்கையைக் கண்டடைவேன். நான் ஆண்டவருடைய உண்மையை மனதில் கொள்ளும்போது எப்படி நான் மன அழுத்தம் பெறுவேன். 

Prayer ஜெபம்: பரம பிதாவே, நான் பிரச்சனையைப் பற்றி யோசிக்கும்போது,  நான் அதை பூதாகரப்படுத்திவிடுகிறேன். ஆனால் நான் உம்மைப் பற்றி நினைக்கும் போது, உம்மைக் காட்டிலும் நான் எதையும் பெரிதாக்கிவிட முடியாது. நீர் உண்மையிலேயே ஆச்சரியமானவர். ஆமென்

No comments:

Post a Comment