Sunday, September 14, 2014

என் தேவன் ஆச்சரியமானவர்!

வேதவசனம்: சங்கீதம் 145: 8 கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

கவனித்தல்: கர்த்தர் கிருபையுள்ளவர்; தகுதியில்லாதவர்களுக்கும் கூட அவர் கிருபையளிக்க விருப்பமுள்ளவராக இருக்கிறார். கர்த்தர் மனதுருக்கமுள்ளவர். மற்றவர்களின் பிரச்சனைகளினால் துன்புறூம்போது அவர் கிரியை செய்ய துவங்குகிறார். கர்த்தர் கோபப்படுவதற்கு தாமதிக்கிறவர்; அவருடைய கோபமானது மிகவும் உக்கிரமானதாகவும் நீதியானதாகவும் இருக்கிறது, ஆனால்  அவர் செய்யும் முதல் செயல் அது அல்ல. கர்த்தர் மிகவும் அன்பு நிறைந்தவர்; மற்ற எந்த அன்பையும் விட அவருடைய அன்பு மேலானது.

பயன்பாடு: தேவன் தாம் விரும்புகிற படி இருக்க முடியும். அவர் அன்புள்ளவராகவும் பரிசுத்தமுள்ளாவராகவும் இல்லாதிருந்தால், அவர் தம் சிருஷ்டிக்கு மிகவும் பயங்கரமானவராக இருப்பார். அவருடைய குணாதிசயம் அவருடய சர்வ வல்ல, சர்வ வியாபிக, சர்வ ஞானம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. ஆனால் என் தேவன் கிருபையும் மனதுருக்கமும், கோபப்படுகிறதற்கு பொறுமையும் அன்பும் நிறைந்தவர். இப்படிப்பட்ட தேவனை சேவிப்பது எவ்வளவு கனமானது!

ஜெபம்: பரலோகப் பிதாவே, நீர் ஆச்சரியமானவர் என்பதைத் தவிர நான் என்ன சொல்ல முடியும்! ஆமெ.

No comments:

Post a Comment