Scripture வேதவசனம்: சங்கீதம் 48:10 தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின்
கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால்
நிறைந்திருக்கிறது.
Observation கவனித்தல்: தேவனுடைய நாமம் அறியப்பட்ட எல்லா இடங்களிலும் அவருக்கு புகழ்ச்சி காணப்படுகிறதை நாம் காணலாம். அவருடைய நாமத்தை அறிந்தவர்களுக்கு எப்பொழுதுமே அவரைத் துதிக்கக் காரணங்கள் உண்டு. சில சமயங்களில் சிறிய காரியங்களிலும் பெரிய காரியங்களிலும் நாம் தேவனுடைய நீதியான செயல்களைக் காண முடியும்.
Application பயன்பாடு: நான் எங்கு சென்றாலும் தேவனைத் துதிக்கக் காரணிகளைக் காண்கிறேன். மேலும் அவருடைய நாமத்தை அறிந்தவர்கள் அனைவருமே அவரைத் துதிக்கிறதையும் நான் காண்கிறேன். நான் அவர்களுடனே சேரவே வேண்டும்.
Prayer ஜெபம்: பரமப் பிதாவே, பூமியில் எல்லா இடங்களிலும் நீர் துதிக்கப்பட பாத்திரர். நீர் துதிக்கப்பட முடியாத இடம் எதுவுமே கிடையாது என்று நான் உறுதியாக சொல்ல முடியும். ஆமென்.
No comments:
Post a Comment