Friday, October 3, 2014

தகப்பனின் விருந்து

Scripture வேதவசனம்: லூக்கா 15:22அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். 23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். 24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். 25. அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு; 26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். 27. அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். 28. அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

Observation கவனித்தல்:   மூத்த சகோதரனின் மனப்பான்மை அந்த விருந்தில் மகிழ்ச்சியாக இருப்பதிலிருந்து அவனை தடுத்தது. அவனுடைய காரணங்கள் சரியானதாக இருந்தாலும் அவனுடைய இருதயம் சரியாக இருக்கவில்லை. அவனுடைய சிந்தையில், இளைய சகோதரனின் வருகை கொண்டாடப்படக் கூடாது என்ற கருத்தால் நிறைந்திருந்தது. அவனுடைய இளைய சகோதரன் திரும்பி வந்தது எவ்வளவு நல்லது என்பதைக் காணக்கூடாதபடி அவனுடைய இருதயம் இருந்தது. அந்த விருந்தானது தனது சகோதரனுக்காக அல்ல, தன் தகப்பனுக்காகவே என்பதை அவன் உணரவில்லை.  மூத்தசகோதரன் விருந்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டான். ஆனால் அவனுடைய மனப்பான்மை அவனை தடுத்து நிறுத்தியது. தங்களது மனப்பான்மையினால் இதுபோல விருந்துக்கு வெளியே ஜனங்கள் இருப்பது எவ்வளவு வருத்தமான காரியம்!
Application பயன்பாடு:  நான் மகிழ்ச்சியாய் இருக்கக் கூடிய தருணங்களை என் மனப்பான்மையினிமித்தம் நான் விலக்கி வைத்திருப்பதைக் காண்கிறேன். நான் அந்த மூத்த சகோதரனைப் போல அல்ல, அந்த தந்தையைப் போல மனமுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். தகப்பன் மகிழ்ச்சியாயிருந்தால், நானும் மகிழ்ச்சியாயிருக்கவேண்டும்.  அந்த விருந்தில் கலகத்தை உண்டுபண்ண நான் யார்?

Prayer ஜெபம்: பரம பிதாவே, நான் உம்மைப் போல காணப்பட விரும்புகிறேன். நான் உம்முடைய கண்ணோட்டத்தில் அனைத்தையும் காண விரும்புகிறேன். நீர் மகிழ்ச்சியாயிருக்கையில் நானும் மகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment