Scripture வேதவசனம்: எசேக்கியேல் 30:1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2. மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்...
2. மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்...
Observation கவனித்தல்: தீர்க்கதரிசனத்தின் வரையறையை நாம் இங்கு காண்கிறோம். அது கர்த்தருடைய வார்த்தையை உரைப்பது ஆகும். நான் தீர்க்கதரிசனம் என்பது எதிர்காலத்தைப் பற்றியது என சிந்திப்பதுண்டு. அனேக வேளைகளில் அது அப்படித்தான் இருக்கிறது. ஆனால் எளிமையாகச் சொல்வதானால், அது தேவனுடைய வார்த்தையை சொல்வது என்பதுதான் சரி.
Application பயன்பாடு: சிலவேளைகளில், அந்த வார்த்தையானது எதிர்காலத்தைப் பற்றியதாகவும், சிலவேளைகளில் நிகழ்காலத்தைப் பற்றியதாகவும் இருக்கிறது. ஆனால் அதில் கேட்பவர்களுக்கு, எனக்கு எப்பொழுதுமே ஒரு செய்தி இருக்கிறது. தேவன் இன்றும் ஜனங்களை நேசிக்கிறார், பாவங்களை வெறுகிறார். ஆகவே அவர் அன்று பேசியவை இன்றும் அர்த்தம் உள்ளவைகளாக இருக்கின்றன. மற்றவர்களுக்குப் பேசியதாக நான் காணும்போது புரிந்துகொள்வதை விட, அவர் எனக்கு பேசியிருப்பதாக நான் காணும்போதே அதிகம் புரிந்து கொள்கிறேன்.
Prayer ஜெபம்: பரம பிதாவே, நான் வாசிக்கும்படி உம்முடைய வார்த்தைகளை எழுதிவைக்கும்படி மனிதர்களை ஏற்ப்படுத்தினதற்காக நன்றி.ஆமென்.
No comments:
Post a Comment