Scripture வேதவசனம்: எஸ்றா 7:27 எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட
யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய
மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா
மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத்தயவு கிடைக்கப்பண்ணின எங்கள்
பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
28. அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்.
28. அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்.
Observation கவனித்தல்: அர்த்தசஷ்டா ராஜா எருசலேமிற்கு போய் திரும்பவும் ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று அனுப்பினதால் எஸ்றா தைரியமடையவில்லை. அரச கஜானாவில் இருந்து பொருட்களை ராஜா கொடுத்ததினால் அவர் திடன்கொள்ள வில்லை. எஸ்றாவின் வேலைக்கு சுற்றிலும் இருக்கும் நாட்டவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று ராஜா கொடுத்த நிருபங்களினிமித்தம் அவர் தைரியம் கொள்ளவில்லை. அவர் எருசலேம் வரும்போது அவருடன் கூட வந்தவர்களினிமித்தமாகவும் கூட அவர் தைரியம் கொள்ள வில்லை. மாறாக, கர்த்தருடைய கரம் அவர் மேல் இருந்தபடியினாலே அவர் திடன் கொண்டார். “ என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் ” இருந்ததினால்” என்ற சொற்றொடரை அவர் பயன்படுத்துவதன் மூலம் அவர் கர்த்தருடைய பிரசன்னத்தைப் பற்றிய உணர்வுடனும், அவர் போகச் சொன்னதையும் அறிந்திருந்தார் என்று அறிகிறோம்.
Application பயன்பாடு: சமீபத்தில் நான் திடனடையும் படி வேறு திசை நோக்கி இருந்ததைக் கண்டேன். என் வேலையில் ஒரு இடைவெளி கிடைக்காதா என்று பார்த்தேன். என் சுமைகளில் சற்று இளைப்பாறுதல் கிடைக்காதா என்றெண்ணினேன். என் கவனத்தை எதையாகிலும் கொண்டு திசைதிருப்பலாமா என்று பார்த்தேன். ஆனால் நான் தேவனுடைய பிரசன்னத்தின் மீது என் கவனத்தைச் செலுத்திய போதே அதிக திடன் பெற்றுக் கொண்டேன்.
Prayer ஜெபம்: பரம பிதாவே, நீர் எப்பொழுதும் என்னுடன் கூட இருக்கிறீர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆயினும், உம் பிரசன்னத்தை சிறப்பாக நீர் உணரச் செய்யும் வேளைகளை நான் விரும்புகிறேன். அவ்வேளைகளிலேயே நீர் சமாதானத்தையும் அதிக பெலனையும் உம்மிடம் இருந்து தருகிறீர். ஆமென்.
No comments:
Post a Comment