Monday, October 13, 2014

அன்பு & பரிசுத்தம்

Scripture வேதவசனம்: நெகேமியா 9:31 ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.
32. இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும் எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும், எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும், உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக.
33. எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.

Observation கவனித்தல்: இஸ்ரவேலர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட ஒன்று கூடினர்.  இந்த வேதபகுதியானது தேவன் அவர்களுடன் இடைப்பட்டதைப் பற்றிய வரலாற்றுப் பூர்வமான ஒரு மதிப்பீடாக இருக்கிறது. இந்த ஜெபத்தில், நாம் தேவனுடைய குணத்தை அதிகமாகக் காண்கிறோம்.  வல்லமையும் மகத்துவமுள்ள ட்ஏவன் கிருபையும் இரக்கமும் உள்ளவராக இருக்கிறார். அவை அவருடைய அன்பின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. அவர் உண்மையும் நீதியும் உள்ளவராகவும் இருக்கிறார். அது அவருடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
 
Application பயன்பாடு: நான் யாரிடம் ஜெபிக்கிறேன் என்பது எனக்கு முக்கியமாகும். அவருடைய குணத்தை அறிந்து கொள்வது எனக்கு நல்லது.  அவருடைய குணத்தை அறிந்து கொள்ளும்போது அவர் என் ஜெபங்களுக்கு தரும் பதிலையும் நான் அறிந்து கொள்ள முடியும்.  மேலும் அவர் உருவாக்கின உலகத்தையும் அவர் எவ்வாறு தன் சிருஷ்டியுடன் இடைபடுகிறார் என்பதையும் நான் அறிந்து கொள்ள முடியும். .  
 
Prayer ஜெபம்: பரிசுத்தமும் அன்பும் நிறந்த தேவனே, நீ எப்பொழுதும் உண்மையுள்ளவராகவும் மாறாதவராகவும் இருக்கிறீர் அதற்காக உமக்கு நன்றி. ஆமென்.

No comments:

Post a Comment