Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 5:
32. இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்.
தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும்
சாட்சி என்றார்கள்
Observation கவனித்தல்: நம்மைச் சுற்றிலும் நடக்கிறவைகளை நாம் கவனிக்கிறது போல பரிசுத்த ஆவியானவரும் கவனிக்கிறார் என்பதை அறிந்து கொள்வது நல்லது. அவருக்கு முன் எதையும் மறைக்க முடியாது. ஆகவே நாம் பார்க்கிறவைகளைக் காட்டிலும் அதிகமாகவே அவர் காண்கிறார். நாம் ஒன்றைப் பார்ப்பதற்கு முன் அங்கே என்ன நடந்தது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.
Application பயன்பாடு: என்னைச் சுற்றிலும் நடப்பவைகளைக் குறிந்து நான் புரிந்து கொள்ளாமலிருந்தால் நான் கவலைப்படத் தேவை இல்லை. எல்லாவற்றையும் மிகச் சரியாய் புரிந்து கொள்கிற வேறோரு சாட்சி உண்டு. நான் அவருடைய பராமரிப்பில் அனைத்தையும் விட்டுவிடலாம். நான் என்ன செய்ய வேண்டும் என்ன சொல்ல வேண்டும் என்பதற்கு நான் அவரை நம்ப முடியும்.
Prayer ஜெபம்: பரம பிதாவே, உம் பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. என் சூழ்நிலைகளுக்காகவும், நான் என்ன பேசவேண்டும் என்பதற்காகவும் அவரை நான் நம்ப முடியும். ஆமென்.
No comments:
Post a Comment