Scripture வேதவசனம்: யோபு 1:8கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ?
உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு
விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
யோபு 2:3 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.

Observation கவனித்தல்: இந்த இருவசனங்களுக்கிடையே யோபுவின் வாழ்க்கையில் எல்லாமே மாறிவிட்டது. அவன் தன்னுடைய மாடுகள், கழுதைகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் பிள்ளைகளை இழந்திருந்தான். அவனுடைய முழு உலகமும் தலைகீழாக மாறிவிட்டிருந்தது. எல்லாமே மாறினாலும் ஒன்றே ஒன்று மட்டும் மாறவில்லை - அது யோபுவைப் பற்றிய தேவனுடைய சாட்சி!
Application பயன்பாடு: நான் பொதுவிலோ அல்லது தனிமையிலோ இருக்கும்போது என்னைப் பற்றியும் இதுபோன்ற சாட்சியை தேவன் சொல்லுமளவுக்கு என்னை பலப்படுத்துவாராக. நான் பரிபூரணமாக இருக்கும்போது, எல்லாவற்றையும் இழந்தவனாக இருக்கும்போதும் என்னைப் பற்றி தேவன் இதுபோல சொல்லட்டும். நான் சுகமாகவும் சுகமில்லாதிருக்கும்போதும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்போதும், தூற்றும் போதும் இதுபோல தேவன் சொல்லும்படி நான் வாழட்டும்.
Prayer ஜெபம்: பரம பிதாவே, மற்றவர் என்னைப் பற்றிச் சொல்வதைப் பார்க்கிலும் நீர் என்னைப் பற்றிச் சொல்வது மிகவும் முக்கியமானது. நான் எல்லாச் சூழ்நிலைகளிலும் உமக்கு உண்மையுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment