Friday, October 17, 2014

தவறான அபிப்பிராயம் நீங்கியது

Scripture வேதவசனம்:   அப்போஸ்தலர் (NIV) 8:14 சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்...
25. இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

Observation கவனித்தல்: யூதர்கள் சமாரியர்களை இரண்டாந்தர குடிகளாக கருதினார்கள். அவ்ர்கள் சமாரியாவின் வழியாக பிரயாணம் செய்வதை தவிர்க்கும்பொருட்டு அதைச் சுற்றிச் செல்வார்கள். ஆனால் தேவன் அவ்விதமாக கருதவில்லை. யோவான் 4:4ல் இயேசு சமாரியா வழியாக போக வைக்கப்பட்டார் என்பதை வாசிக்கிறோம். மேற்கண்ட வசனத்தில் விசுவாசிகளின் கருத்து சமாரியர்களின் விஷயத்தில் மாறுவதை நாம் காண்கிறோம். சமாரியாவில் தேவன் செய்வதைக் காண்பதற்காக எருசலேமில் உள்ள யூதர்களான அப்போஸ்தலர்கள் பேதுருவையும் யோவானையும் அனுப்பினர். அவர்கள் தங்கள் பயணத்திலிருந்து எருசலேமிற்கு திரும்புகையில் அவர்கள் அனேக சமாரிய கிராமங்களில் நின்று இயேசுவைப் பற்றிச் சொன்னார்கள்.

Application பயன்பாடு: என் வாழ்க்கையில் இருந்த் நான் கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயங்களை நீக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார். அவர் பார்க்கிற விதமாக நான் அனைவரையும் காண பழக வேண்டும். எனது பாவங்களுக்காக இயேசுவின் சிலுவை மரணம் விலைக்கிரயம் செலுத்தினது  போல அவர்களுடைய பாவங்களுக்குமான விலையை செலுத்தி இருக்கிறது.
 
Prayer ஜெபம்: பரலோகப் பிதாவே, நீர் இந்த உலகத்தை மிகவும் நேசித்தபடியினால் உம் மகனாகிய இயேசுவை அனுப்பினீர். ஆதி திருச்சபை பேதுருவையும் யோவானையும் அனுப்ப விருப்பமுள்ளதாயிருந்தது.  இன்று நான் அதுபோல தேவை உள்ளவர்களிடம் அனுப்பப்பட விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment