Scripture வேதவசனம்: சங்கீதம்108:1 தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
Observation கவனித்தல்: நம் தேவன் ஆயத்தமாக இருக்கிறார். அவருடைய ஊழியக்காரர்களும் ஆயத்தமாக இருப்பதே தகுதியானது. ஆயத்தமாக இருக்கிற தேவனை ஜனங்கள் நம்பலாம். ஆயத்தமுள்ள இருதயமுடைய ஒருவரை தேவன் நம்பமுடியும். ஆயத்தமுள்ள இருதயத்தை சூழ்நிலைகள் மாற்ற முடியாது.
Application பயன்பாடு: தேவனைத் துதிக்கப் போகிறேனா என்பது கேள்வி அல்ல. நான் ஏற்கனவே அதற்கு முடிவெடுத்து விட்டேன்.
Prayer ஜெபம்: பரலோகப் பிதாவே, நீர் ஆராதனைக்கும் துதிக்கும் பாத்திரர். நான் தனிமையில் இருக்கும்போதோ அல்லது மற்ற விசுவாசிகளுடன் கூடி வரும்போதோ உம்மை முழு இருதயத்தோடும் ஆராதிக்க விரும்புகிறேன். ஏனெனில் நீர் பாத்திரர்.ஆமென்.
No comments:
Post a Comment