Scripture வேதவசனம்: மாற்கு 13:31 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Observation கவனித்தல்: நாம் இயேசுவை விசுவாசித்தால், அவர் வார்த்தைகளைப் பற்றி ஆராய்வது மிகவும் சிறந்த ஒரு ஆராய்ச்சி ஆக மாறிவிடும். நிரந்தரமற்ற ஒன்றைப் படிப்பதை விட, நிரந்தரமான ஒன்றைப் படிப்பதற்காக நேரம் செலவிடுவது அர்த்தமுள்ளதாக எனக்குப் படுகிறது.
Application பயன்பாடு: இந்த SOAP (Scripture, Observation, Application, Prayer) தின்ம தியானம் தேவனுடைய வார்த்தையைக் கனப்படுத்துவதற்கான ஒரு நல்ல வழி ஆகும். பயன்பாடு பகுதியில் உள்ள வார்த்தைகள் அவைகளைப் பயன்படுத்த தூண்டி, என் வாழ்வின் சூழ்லில் அப்பியாசிக்கச் செய்கிறது. நிரந்தரமான ஒன்றின் மீது என் வாழ்வைக் கட்டுவது மிகவும் நல்லது.
Prayer ஜெபம்: ஒருபோதும் ஒழிந்து போகாத உம் வார்த்தைகளுக்காக இயேசுவே உமக்கு நன்றி. இந்த பொல்லாத உலகில், நம்பத்தக்க ஒன்றை உடையவர்களாக இருப்பது மிகவும் நல்லது. ஆமென்.
No comments:
Post a Comment