Scripture வேதவசனம்: ,மாற்கு 15:15 அப்பொழுது பிலாத்து ஜனங்களை பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை
அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில்
அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
Observation கவனித்தல்: அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன் நம்மிடம் வந்து என்ன தேவை என்று கேட்டு அதன் படி பேசி வாக்கு சேகரிப்பார்கள். தேர்தலில் ஜெயித்தபின்னரோ அவர்கள் தாங்கள் செய்ய விரும்புகிறதை மட்டுமே செய்வார்கள். பிலாத்து நீதியை நடப்பிக்கிறதற்குப் பதிலாக, ஜனங்களுக்குப் பிரியமானதைச் செய்தான். நான் படித்த பள்ளியின் ஆசிரியர் இப்படியாக எங்களுக்கு போதித்தார்: அரசியல்வாதி அடுத்த தேர்தலை மட்டுமே பார்க்கிறார். ஆனால் நல்ல ஆட்சியாளர் அடுத்த தலைமுறையைப் பார்க்கிறார்.
Application பயன்பாடு: என் தீர்மானங்களைப் பாதிக்கக் கூடியவைகள் மீது நான் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பிரியப்படுத்தவேண்டும் என்று எடுக்கப்படுகிறவைகள் நல்ல தீர்மானங்களுக்கு வழிநடத்துவது அரிது. ஆனால் எனக்கு உதவி செய்கிற மூன்று காரியங்கள் உள்ளன: முதலாவது, வேதாகமத்தை அறிந்து கொள்வதுதேவனுடைய குணாதிசயத்தை அறிந்து கொள்ள உதவுகிறது நான் அவருக்கு பிடித்தவைகள் மற்றும் பிடிக்காதவைகளை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். நான் வேத வாசிப்பில் உண்மை உள்ளவனாக இருக்க வேண்டும். நல்ல கிறிஸ்தவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. மற்றவர்களுடன் நல்ல ஐக்கியத்தை பேணுவது நல்லது. அவர்கள் நான் என்ன கேட்க வேண்டும் என்பதைச் சொலவார்கள். மூன்றாவதாக, என்னை வழிநடத்த நான் பரிசுத்த ஆவியானவரை நம்ப முடியும். அவர் என்னிடம் பேசுவதைக் கேட்டு அதின் படி செய்ய நான் கற்றுக் கொள்ள வேண்டும்.
Prayer ஜெபம்: பரம பிதாவே, என் பாவங்களை மன்னிக்க நீர் வழி வகை செய்தீர். மேலும் உம்மைப் பிரியப்படுத்தும் வாழ்வு வாழவும் வழி திறந்தீர். என் வாழ்க்கை உம்மை திருப்திப் படுத்துவதாக இருக்கட்டும். ஆமென்.
No comments:
Post a Comment