Scripture வேதவசனம்: 1 கொரிந்தியர் 10:15 உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
Observation கவனித்தல்: வாழ்க்கைஎன்பது ஒரு ஓட்டப்பந்தயம் என்றும் அதில் நாம் கண்டிப்பாக ஓட வேண்டும் என்றும் பவுல் கொரிந்தியருக்கு சொல்வதை காண்கிறோம். சரித்திரத்திலிருந்து அவர் அவர்களுக்கு சில உதாரணங்களைத் தருகிறார். கர்த்தரின் பந்தியை சரிவரக் கைக்கொள்வது எப்படி என்பதை அடுத்ததாக அவர் சொல்ல இருக்கிறார். நான் சொல்வது சரிதானா என்று நிதானித்துப் பார்க்க உங்களுக்கு போதிய அறிவு உண்டென்று அவர் சொல்வதை இவ்வசனத்தில் காண்கிறோம். அவர்கள் பகுத்தறிவை மட்டும் உடையவர்களாக இல்லாமல், தங்களில் பரிசுத்த ஆவியானவரையும், பழைய ஏற்ப்பாட்டு வேத நூல்களையும் உடையவர்களாயும் இருந்தனர். தன் வார்த்தைகளை அவர்களால் நிதானிக்க முடியும் என்று பவுல் விசுவாசம் உள்ளவராக இருந்தார். அப்போஸ்தலர் 17:11ல் ஜனங்கள் அவருடைய போதனைகளை வேதவசனக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள் என்று எழுதுகிறார்.
Application பயன்பாடு: நான் கேட்பவைகளை, பிரசங்கத்தில் கேட்பவைகளை நிதானித்துப் பார்க்க வேண்டும். கர்த்தர் என்னிடம் சொன்னார் என்று அவர்கள் சொன்னதற்காக நான் அவைகளை தேவனுடைய வார்த்தை என்று ஏற்றுக் கொள்ளத் தேவை இல்லை. நான் அவைகளை நிதானித்துப் பார்க்க வேண்டு. தேவனுடைய தன்மை, அவருடைய வார்த்தை , அவர் கடந்தகாலத்தில் என்னுடன் பேசியவை போன்றவைகளை பற்றிய அறிவு எனக்குண்டு. என்னைச் சுற்றிலும் தேவன் வைத்த மற்ற கிறிஸ்தவர்களும் உண்டு. இந்த் நான்கு காரியங்களையும் என்னுடைய விசுவாசத்துடன் கலந்து நான் புரிகிற விதத்தில் தேவன் பேசுவார் என்று தேவனுக்குக் காத்திருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருப்பதால், தேவன் பேசுவதை என்னால் நிதானிக்க முடியும் என்ற நிச்சயம் எனக்குண்டு.
Prayer ஜெபம்: பரம பிதாவே, உம் வார்த்தைகளை வாசிப்பது நீர் பேசுபவர் என்ற நிச்சயத்தைத் தருகிறது. நான் அதைக் கேட்டு உன் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்மென்று நீர் விரும்புகிறீர். நான் கேட்பதை நிதானிக்க உம்மையே நம்பி இருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment