Tuesday, November 11, 2014

அவர் விரும்பின படியால்...




Scripture வேதவசனம்: 1 கொரிந்தியர்12: 17 சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
18. தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
19. அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?

Observation பயன்பாடு:  நாம் பார்க்கக் கூடியவாறு நமக்கு கைகளும் கால்களும் உள்ளன என்பது உண்மை. ஆனால் சிறப்பான வெளிப்படுத்தல் மூலமாக மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய மற்றுமொரு உண்மையும் உண்டு. சரீரத்தில் அவயவங்கள் காணக் கூடியதாக இருந்தாலும், அவை எவ்வாறு அதனதன் இடத்தில் இருக்கின்றன என்பதை அறிய வெளிப்பாடு வேண்டும் என்பது உண்மை ஆகும். இங்கே வேதாகமம் சொல்வதென்னவெனில், தேவனால் அவயவங்கள் உண்டாக்கப்பட்டு அவர் விரும்பிய வண்ணமாக பொருத்தப்பட்டன என்பதாகும். அவை இவ்வண்ணமாக இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி.
Application பயன்பாடுநான் தேவனுடைய சரீரத்தில் அவருடைய மகிழ்ச்சிக்காகவும், நோக்கத்திற்காகவும் வைக்கப்பட்டிருக்கிறேன். நான் பாதுகாப்பாக அதில் இணைக்கப்பட்டிருக்கிறேன் என்பது அச்சரீரத்தின் ஜீவன் என்னில் பாய்ந்தோடுகிறது என்பதைக் குறிக்கிறது. அது என்னுள் பாய்ந்தோட வில்லை எனில், சீக்கிரத்தில் எனக்குள் வருவதும் நின்று விடும். எனது சரீரத்தில் உள்ள அவயவங்களை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு நான் மாற்ற முடியாதது போல, என்னை சபையில் தேவன் வைத்த இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவது சேதத்தையே உண்டாக்கும். 
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நீர் என்னை வைத்த இடத்தில் உண்மையாக இருக்கவும் உண்மையாய் நீர் சொல்வதைச் செய்யவும் எனக்குதவும். ஆமென்.


No comments:

Post a Comment