Scripture வேதவசனம்: 1 கொரிந்தியர் 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள்
அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து
நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
Observation கவனித்தல்: கடவுள் இருகிறார் என்பதனை நம்ப மறுப்பவர்கள் இந்த உலகில் எப்படி உயிரினங்கள் தோன்றின என்பதற்கான விளக்கத்தைத் தரவேண்டும். பரிணாமக் கொள்கை நான் கேட்டவற்றில் எல்லாவற்றையும் விட நல்ல விளக்கம், ஆனால் அதில் தேவன் இல்லை. அவர்கள் வேதாகம விளக்கம் முட்டாள்தனமானது என்று கருதுகிறார்கள். நான் அதைக் காண்கையில் ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உள்ள காட்சிகளை மட்டும் தொடர்ந்து நீக்குவது போல உள்ளது. அப்படிப் பட்ட படம் அறிவுப் பொருத்தமானதாக இல்லை. இறைவன் இல்லாத உலகம் பகுத்தறிவுக்கு உகந்ததாக இல்லை.
Application பயன்பாடு: நான் கடவுளைக் காட்சியில் வைக்கும்போது காட்சிகள் மிகவும் ஆச்சரியமான விதத்தில் ஒன்றுடன் ஒன்று பொருந்துகின்றன. வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இது சரியாக இருப்பதை நான் காண்கிறேன். கடவுளை என் வாழ்வில், வீட்டில், சபையில் மற்றும் உறவுகளில் வைக்கும்போது எல்லாம் மிகச் சரியான இடத்தில் இருக்கிறது. நான் எவ்வளவு அதிகமாக கடவுளையும் அவருடைய குணாதிசயத்தையும் புரிந்து கொள்கிறேனோ அவ்வளவாய் இவ்வுலகில் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
Prayer ஜெபம்: பரம பிதாவே, வேதாகமத்தில் உம்மை வெளிப்படுத்தி இருப்பதற்காக நன்றி. இன்று என் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் உம்மைக் காண உதவும். ஆமென்.
No comments:
Post a Comment