Scripture வேதவசனம்: சங்கீதம் 124:8 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
Observation கவனித்தல்: உதவி செய்பவரைப் பொறுத்தே ஒருவர் பெறும் உதவியானது நன்மையானதாகவோ அல்லது மோசமானதாகவோ இருக்கும். உதவி செய்பவரைப் பொறுத்து அது ஞானமானதாகவோ அல்லது மதியீனமானதகாவோ இருக்கும். உதவி செய்பவரிடம் இருக்கக் கூடிய வசதிகளைப் பொறுத்தே அவை அமையும். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனை விட சிறந்த உதவியாளர் எவரும் இருக்க முடியாது.
Application பயன்பாடு: நம்முன் இருக்கும் முதல் கேள்வி: எனக்கு உதவக் கூடிய அளவுக்கு அவர் என்னை நேசிக்கிறாரா? நான் உதவப்பட தகுதியானவன் என நினைக்கிறாரா? எனக்கு உதவ விரும்புகிறாரா? ஆம் என்பதே இதற்கான சரியான பதில். கல்வாரி சிலுவை மரணம் அவரின் அன்பை காண்பிக்கிறது. அவருடைய வாக்குத்தத்தங்கள் என்மேல் அவர் கொண்டிருக்கும் மதிப்பைக் காண்பிக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் அவர் எனக்கு உதவ விரும்புவதைக் காண்பிக்கிறது.
Prayer ஜெபம்: பரலோக பிதாவே, நீர் ஆச்சரியமானவர் என்பதில் எள்ளளவேனும் சந்தேகமில்லை. நீர் என் தேவனாக இருப்பதற்காக உமக்குக் கோடி நன்றிகள். ஆமென்.
No comments:
Post a Comment