Scripture வேதவசனம்: Matthew (NIV) 18:20 For where two or three come together in my name, there am I with them.
Observation கவனித்தல்: கர்த்தருக்கு ஒருமைப்பாடு மிக முக்கியமானதாகும். அவர் அதை விரும்புகிறார். இரண்டுபேர், மூன்றுபேர் கூடுவரும்போது, தாங்கள் சிறிய கூட்டமாக இருக்கிறோமே என்று அவர்கள் வருத்தப்படக் கூடாது என்ற கருத்தில் நான் இந்த வசங்களை வாசிப்பதுண்டு. அவர் அவர்களுடன் இருப்பார். வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது தேவன் சிறிய கூட்டத்துடன் இடைபடுவது அவர்க்கு என்றுமே பிரச்சனையாக இருந்ததில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும்.
Application பயன்பாடு: நான் மற்ற விசுவாசியுடன் இருக்கும் நேரத்தை ஆசீர்வாதமாக கருதவேண்டும். ஒருவேளை நான் அவருடன் பேரூந்தில் பயணம் செய்யலாம். பல்பொருள் அங்காடியில் நான் அவரைக் சந்திக்கலாம். அப்படி சந்திக்கும்போது இயேசுவின் பிரசன்னத்தை உணராத தருணங்கள் அனேகம் உண்டு. நாம் அவருடைய பிரசன்னத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நான் மற்ற விசுவாசிகளுடன் சந்திக்கும்போது நீர் அங்கே இருக்கிறீர் என்பதை அறிந்து கொள்ளும் ஆசீர்வாதத்தை எனக்குத் தாரும். ஆமென்.
No comments:
Post a Comment