Scripture வேதவசனம்: மத்தேயு 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
Observation கவனித்தல்: இந்த வசனத்திற்கு முன்னால், தன் மகனுடைய திருமணத்திற்கு அனேகரை அழைக்கும்படி ராஜா எடுத்த முயற்சிகளைப் பற்றி வாசிக்கலாம். அழைக்கப்பட்ட விருந்தினர்கள் வராமல் போன போது, இராஜா மற்றவர்களை அழைக்கும்படி தன் ஊழியர்களை அனுப்பினான். அதில் சிலர் அவமானப்படுத்தப்பட்டனர், சிலர் கொல்லப்பட்டனர். கடைசியில் வீதியில் அகப்படும் எவரையும் விருந்து சாலைக்கும் அழைத்துவரும்படி தன் ஊழியர்களை ராஜா அனுப்பினார். இராஜா வரும்போது ஒரு விருந்தினர் திருமண உடையை அணிந்து கொள்ள மறுப்பதைப் பார்த்தார். அந்த விருந்தினரை கைகளைக் கட்டி வெளியே தூக்கி எறியும்படி தண்டனை கொடுக்கப்பட்டது. அழைக்கப்பட்டவர்கள் அனேகராயிருந்தாலும், அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களும், திருமண உடையை தரித்தவர்கள் மட்டுமே விருந்தில் கலந்து மகிழ்ச்சியுடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
Application பயன்பாடு: தேவனுடைய
இராஜ்ஜியத்திற்குள் வர அழைக்கப்படுவது மிகவும் பாக்கியமானதாகும். எனக்கு தேவையானது என்னாமே அளிக்கப்பட்டிருப்பது ஆசீர்வாதமானதாகும். எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கிருபையாக அவர் எனக்களித்த இரட்சிப்பின் உடையை நான் அணிந்திருக்கிறேன்.
Prayer ஜெபம்: பரம பிதாவே, நீர் எவ்வளவு அதிகமாக உம் மகனை நேசிக்கிறீர். அவர் உமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்ததற்காக, நீர் எவ்வளவு பெரிய விருந்தை ஆயத்தம் செய்வீர். நானும் அதில் ஒரு பங்கு வகிக்க வேண்டும் என்று நீர் விரும்புவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன், மனத்தாழ்மை கொள்கிறேன். என்னை அழைத்ததற்காகவும், இரட்சிப்பின் ஆடையை தந்ததற்காகவும் நன்றி. நான் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment