Tuesday, November 25, 2014

எனக்குக் கொடுக்கப்பட்டவைகளை மன உண்மையுடன் பயன்படுத்துதல்

Scripture வேதவசனம்: மத்தேயு 25:29  உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Observation கவனித்தல்: கடினமான வார்த்தைகளை அவை சொல்லப்பட்ட சூழ்நிலையில் வைத்துப் பார்க்கும்போது புரிந்து கொள்ள ஏதுவுண்டாகும். எஜமான் பிரயாணம் செல்லுகையில், ஊழியக்காரர்களுக்கு தங்கம் நிறைந்த பைகள் (தாலந்துகள்) கொடுக்கப்பட்டது. ஒருவன் அவைகளை முதலீடு செய்து மேலும் ஐந்து தாலந்துகளைப் பெற்றான்.    அவனுக்கு பொறுப்புகளை அதிகரித்து அவனுடைய எஜமான் கனப்படுத்தினான். இரண்டு தாலந்துகள் கொடுக்கப்பட்டவன் அதை முதலீடு செய்து, மேலும் இரண்டு தாலந்துகளை சம்பாதித்தான். அவனையும் எஜமான் கனப்படுத்தினார். ஆனால் ஒரு தாலந்தைப் பெற்றவனோ பயந்து உள்ளதையும் இழந்து போனான். எஜமான் அவனிடம் கோபப்பட்டார்.  அந்த ஊழியன் அதை வங்கியில் வைத்து குறைந்த பட்சம் வட்டியையாவது பெற்றிருக்கலாம். எஜமான் அவனிடம் இருந்த தாலந்தைப் பெற்று பத்து தாலந்தை உடையவனிடம் கொடுத்தான். உண்மையற்ற அந்த ஊழியன் தண்டிக்கப்பட்டான்.
Application பயன்பாடு: தேவன் எனக்குக் கொடுத்த தாலந்துகள், திறமைகள் மற்றும் வளங்கள் ஆகியவற்றிற்கு நான் பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  அவருடைய இராஜ்ஜியத்திற்காக அவைகள் பயன்படவேண்டும் என்றே அவர் அவைகளை எனக்குக் கொடுத்திருக்கிறார்.
Prayer ஜெபம்: பரம பிதாவே, நான் பிரயோஜனமுள்ள ஒரு ஊழியக்காரனாக, நீர் எனக்குத் தந்திருப்பவைகளை உண்மையுடன் பயன்படுத்துபவனாக இருக்க எனக்கு உதவும். ஆமென்.
 

No comments:

Post a Comment