Sunday, November 30, 2014

அவரின் பிரசன்னம்

Scripture வேதவசனம்: ரோமர் 7:7 பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

Observation கவனித்தல்:  ஒரு தாய் தன் குழந்தைக்கு எது ஆபத்து என்று எச்சரிக்கத் தெரிந்தவளாக இருக்கிறாள். அதேவேளையில் அந்த ஆபத்தானவைகளே தன் குழந்தையின் கவனத்தை ஈர்த்து வைத்திருக்கிறதையும் அவள் அறிவாள். ஆகவே அவள் குழந்தையுடனே கூட இருந்து, ஆபத்துகள் நேரிடாவண்ணம், குழந்தையின் கவனத்தை தன் பக்கமாக திருப்பி வைத்துக் கொள்கிறாள். அவளுடைய பிரசன்னம் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அவளுடைய பிரசன்னம் ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. ஒருவேளை அவள் எச்சரித்துவிட்டு குழந்தையை விட்டு தூரச் சென்றால், குழந்தையானது சீக்கிரமே ஆபத்தானவைகளை நோக்கி சென்று விடும் அபாயம் உண்டு. ஆனால் அவளுடைய கவனமான பிரசன்னம் குழந்தையை அவ்வாபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது.

அவளுடைய எச்சரிக்கை போதிக்கிறது, அவளுடைய பிரசன்னமோ பாதுகாப்பாக அமைகிறது. தேவனைப் பொறுத்தவரையிலும் கூட இது எவ்வளவு உண்மையானதாக இருக்கிறது. நாம் புரிதலிலும் கற்றுக்கொள்ளுதலிலும் வளரவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.  ஆகவே அவர் தம் வார்த்தையாகிய வேதாகமத்தை தந்திருக்கிறார்.  மேலும் அவருடைய கவனம் நம்மேல் தேவை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவர் நம்முடனே கூட இருக்கிறார். 

மேலும் குழந்தையுடன் நேரம் செலவழிப்பது எந்த தாய்க்கும் மகிழ்ச்சியானதாக இருக்கும். அதுபோலவே தேவன் நம்முடன் கூட தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பது அவருக்கு வருத்தத்தை அளிக்க முடியாது. ஒரு தாய் தன் குழந்தையுடன் இருப்பதைப் போல, அதைக்காட்டிலும் அதிகமாக அவர் மகிழ்கிறார்.
 
Application பயன்பாடு: பரலோகத் தகப்பனுக்கு நான் அதிக மகிழ்ச்சி அளிப்பவனாக இருக்கட்டும்.
 
Prayer ஜெபம்:  பரம பிதாவே, நான் உம்முடனான வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment