Scripture வேதவசனம்: கலாத்தியர் 1:11 மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
12. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
12. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
Observation கவனித்தல்: பவுல் பழைய ஏற்ப்பாட்டை நன்கு கற்றவராகவும், மிகச் சிறந்த ஆசிரியர்களால் போதிக்கப்பட்டவராகவும் இருந்தார். இயேசுவைப் பின்பற்றுபவர்களை உபத்திரவப் படுத்துவதற்காக செல்லும் வழியில் இயேசுவைச் சந்தித்த பின், அவர் பல வருடங்கள் மற்றவர்களின் பார்வையில் படாமல் வனாந்திரத்தில் இருந்தார். அங்குதான் தேவன் அவருடைய சிந்தனையையும் மோசேயின் பிரமாணத்தைப் பற்றிய புரிதலையும் மாற்றி இருக்கக் கூடும். இயேசு தம்மை அவருக்கு தரிசனத்தில் வெளிப்படுத்தினார். பின்னர் பரிசுத்த ஆவியானவர் பழைய ஏற்ப்பாட்டு வேத வாக்கியங்களில் இயேசு இருப்பதை அவருக்கு வெளிப்படுத்தினார்.
Application பயன்பாடு: இந்த தின தியானத்தை நான் எழுதும் அனேக நேரங்களில், இதற்கு முன் நான் அறியாத பல காரியங்களை தேவன் எனக்கு வெளிப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நான் முழு வேதாகமத்தையும் வாசிக்கும் பழக்கத்தை பல வருடங்களாக செய்து வருகிறேன். ஆயினும் ஒவ்வொரு நாளும் ஆண்டவரிடம் இருந்து புதிதாக ஒன்றை கடந்த நாட்கள் முழுவதிலும் கற்று வந்திருக்கிறேன். சில சமயங்களில் கடந்த காலத்தில் நிகழந்த ஒன்றை வைத்து புத்துணர்வுட்டுகிறார். ஆயினும் பெரும்பாலான சமயங்களில் அவர் எனக்கு புத்தம் புது புரிதலைத் தருகிறார். அவர் என் இருதயத்தையும் கண்களையும் திறந்து, தம்மைத்தாமே எனக்கு வெளிப்படுத்துகிறார்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, என் கண்கள், காதுகள் மற்றும் இருதயத்தைத் திறந்ததற்காக நன்றி. வேத வார்த்தையில் இயேசுவை எனக்கு வெளிப்படுத்துவதற்காக நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment