Scripture வேதவசனம்: லூக்கா 5:20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
24. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து,
உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
25. உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
Observation கவனித்தல்: சில நண்பர்கள் திமிர்வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை கட்டிலில் வைத்து இயேசுவிடம் எடுத்துச் சென்றார்கள். தன் நண்பரின் தேவையை இயேசுவால் அருள முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இயேசு இருந்த வீட்டில் அதிகமான மக்கள் இருந்ததினால் உள்ளே அவரிடம் எடுத்தச் செல்ல முடியாமல் இருந்த சூழ்நிலையில், மேலே கூரையை பிரித்து தங்கள் நண்பரை இயேசுவின் முன்பாக இறக்கி வைத்தனர். அனேக சமயங்களில் இயேசு தங்கள் தேவைக்காக அவரிடம் வருபவர்களின் விசுவாசத்திற்கு பதில் அளித்திருக்கிறார். ஆனால் இங்கே இயேசு தங்கள் நண்பரைச் சுமந்து வந்தவர்களின் விசுவாசத்தைப் பார்த்து உதவி செய்தார்.
Application பயன்பாடு: என் விசுவாசமானது என் நண்பரின் சுகம் மற்றும் இரட்சிப்புக்கு திறவுகோலாக இருக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொள்வது நல்லது. அந்த திமிர்வாதக்காரரின் நண்பர்களைப் போல, என் நண்பர்களை இயேசுவுக்கு முன்பாக கொண்டு வருவது என் விருப்பமாக இருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் நண்பர்களை உம்மிடம் கொண்டு வர எனக்குதவும். நீர் என் விசுவாசத்தைக் கண்டு அவர்கள் தேவைகளை தீர்ப்பீராக. ஆமென்.
No comments:
Post a Comment