Scripture வேதவசனம்: கலாத்தியர் 5:25 நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
Observation கவனித்தல்: பரிசுத்த ஆவியை தன்னகத்தே கொண்டிருக்கிறவர்கள் அவர்களுடைய வாழ்விலும் மற்றவர்கள் காணத்தக்க வாழவேண்டும். அவர்கள் பேச்சிலும் செயலிலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் இருப்பதை மற்றவர்கள் காணமுடியும்.
Application பயன்பாடு: காலமும் இடமும் மிக முக்கியமானதாகும். நான் பரிசுத்த ஆவியானவருடன் நடந்தால், நான் போக வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் செல்பவனாக இருப்பேன்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்க்கையில் சொல் செயல் பேச்சில் நீர் வாழும்படி விரும்புகிறேன். உம்முடனே நடப்பது என்பது, பரம பிதாவிற்கு என் வாழ்க்கை மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக காட்டுகிறது. ஏனெனில் அவர் என்னில் வாழ்கிற இயேசுவைக் காண நீர் உதவுகிறீர். ஆமென்.
No comments:
Post a Comment