Monday, January 5, 2015

என்னில் இருந்து ஆரம்பிக்கிறது

Scripture வேதவசனம்: லூக்கா 6:38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.

Observation கவனித்தல்:  கொடுத்தலில் இருந்து பெறுதல் துவங்குகிறது. சிலர் தாங்கள் பெறுவதைப் பொறுத்துக் கொடுக்க விரும்புகின்றனர். ஆனால் இயேசுவோ நீங்கள் கொடுக்கும் அளவைப் பொறுத்தே பெறுவீர்கள் என்று சொன்னார். சிலர் குறைவாகக் கொடுத்து அதிகம் பெற விரும்புகின்றனர். ஆனால் இயேசு சொன்னது இதுவன்று. கொடுத்தலில் நான் பயன்படுத்தும் அதே அளவுதான் எனக்கு கொடுக்கப்படும்போதும் பயன்படுத்தப்படும் என்று சொன்னார்.
 
Application பயன்பாடு:  இது என்னில் இருந்து ஆரம்பிக்கிறது. நான் நல்ல அளவில் கொடுக்கும்போது, நான் பெறுவதும் மிகவும் நல்ல அளவாக இருக்கும். நான் அமுக்கு குலுக்கி நன்றாய் சரிந்து விழும் அளவுக்குக் கொடுத்தால், அதே அளவில் பெற்றும் கொள்வேன். மிகவும் உதாரத்துவமான தேவன் நானும் உதாரத்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். 
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, இந்த வசனத்தின் உண்மையை நீர் அனேக நேரங்களில் நிரூபித்திருக்கிறீர்.  நான் அமுக்கி வைப்பதைக் காட்டிலும் அதிகமாக நீர் வைக்க முடியும் என்பதை நான் கண்டிருக்கிறேன். நான் நினைப்பதைக் காட்டிலும் உம் ஈவுகள் மிகவும் அளவிலாததாக இருக்கிறது.நீர் கொடுப்பதை விட அதிகமாக நான் ஒருபோதும் கொடுக்க முடியாது. ஆமென்.

No comments:

Post a Comment